தந்தை சிறிலங்கா கடற்படையால் கொல்லப்பட்டபோதிலும் சாதனை மாணவி

யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிஷானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்ட நிலையில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாதக் குழந்தையாக இருக்கும் போது கடற்றொழிலுக்கு சென்றவேளை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர்இ குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார்.

நிம்மதியாகக் கல்வி கற்பதற்கு கூட சீரான வீடு இல்லாத நிலையிலும்இ இந்த மாணவி சாதனை படைத்துள்ளார்.