நுவரெலியா – ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் நுவரெலியா – ஹாவாஎலிய பகுதியை சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வயிற்று உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், சனிக்கிழமை 14ஆம் திகதி ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்திய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இது ஒரு திட்டமிட்ட கொலையா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





