யாழின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தையின் கண்காணிப்பு மற்றும் சந்தைக்குள் சில கணனித் தொழில்நுட்பங்களை முன்னெடுக்கும் நல்லூர்ப் பிரதேச சபைத் தவிசாளர் பத்மநாதன் மயூரனின் செயற்திட்டத்திற்கு இணங்கப் பொதுச் சந்தைக்கு வரும் நுகர்வோர் இலகுவாக மரக்கறி விலைகள் மற்றும் சில அறிவித்தல்களை அறிந்து கொள்ளும் முகமாகச் சந்தைப் பகுதிக்குள் காட்சித் திரைகளைப் பொருத்துகின்ற பணிகளைத் தற்போது நல்லூர்ப் பிரதேச சபையினர் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றனர்.
மேற்படி பணிகள் நிறைவடைந்த பின் தினமும் அதிகாலை வேளையில் அன்றைய மரக்கறி விலைகள் காட்சித் திரைகளில் காட்சிப்படுத்தப்படுவதுடன் மரக்கறி விலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும் நல்லூர்ப் பிரதேச சபையின் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் சந்தைப் பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ள காட்சித் திரைகளில் உடனுக்குடன் மாற்றம் செய்யப்படுமென நல்லூர்ப் பிரதேச சபையினர் அறிவித்துள்ளனர்.






