தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி: வெற்றிவாகை சூடியது தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பெண்கள் அணி

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான 14 வயதுப் பெண்களுக்கான சமபோஷா  வெற்றிக் கிண்ணத்துக்கான  தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி புதன்கிழமை(11.02.2026) கொழும்பு குதிரைப் பந்தைய மைதானத்தில் இடம்பெற்றது.  விறுவிறுப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தின் அயற் பாடசாலைகளான தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 14 வயதுப் பெண்கள் அணியுடன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் 14 வயதுப் பெண்கள் அணிகள் மோதின.
ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமனிலையானதால் சமனிலைத் தவிர்ப்பு உதைமுடிவில் 03:02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி யூனியன் கல்லூரி அணி தேசிய சம்பியனாகியது.