இந்து மதத்தலைவர் தாக்கப்பட்டமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத இனவாத – மதவாத வெறிச்செயல். தையிட்டியில் அரங்கேறிய சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன்றைய தாக்குதல்களும் கைதுகளும் அநுரகுமார தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி – தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இனவாதக் கோர முகத்தையே காட்டுகின்றது.
எங்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களே ஒருகணம் சிந்தியுங்கள்!
இன்று இந்து மதத்தலைவருக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறவாதீர்கள்.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்! இனத்துக்கான போராட்டம் தொடரும். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை என குறிப்பிடப்பட்டுள்ளது.




