களுத்துறை – பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பிட்டிய பாலத்திற்கு அருகில் ரயில் மோதி நால்வர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (09) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த அதிவேக ரயில் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் 87 வயதுடைய பிரித்தானிய நாட்டு பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு தம்பதியினர், ஒரு இலங்கையர் மற்றும் அவரது குழந்தை ஆகிய நால்வரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவர்கள் ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்வத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





