தொல்புரம் பாணாவெட்டி மருத்துவமனையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கமும், பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை(24.02.2026) மேற்படி மருத்துவமனைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் இவ்விடயம் தொடர்பான கோரிக்கை மகஜர் வழங்கப்பட்டது.
பாணாவெட்டி வைத்தியசாலையில் வைத்து நோயாளர் நலன்புரிச் சங்கமும், வட்டுக்கோட்டையில் வைத்துப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மேற்படி கோரிக்கை மகஜர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜாவிடம் நேரடியாக வழங்கியுள்ளனர். இதுதொடர்பான கோரிக்கை மகஜர் யாழ்.பிராந்தியச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவகலாநிதி.ஆ.கேதீஸ்வரனுக் கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




