நல்லூரிலிருந்து வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் நோக்கித் தரிசன யாத்திரை ஆரம்பம்

மாசிமக விரத நாளை முன்னிட்டு இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் வரலாற்றுப் புகழ்மிக்க வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் நோக்கிய ஆன்மீகத் தரிசன யாத்திரை  திங்கட்கிழமை (02.03.2026) காலை-06 மணியளவில் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமாகியது.