நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்!

நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின்  விசேட கூட்டம் வெள்ளிக்கிழமை (12.12.2025) காலை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டைச் சபையில் சமர்ப்பித்தார்.
20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் பாதீட்டுக்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழரசுக் கட்சியின் 07 உறுப்பினர்கள், தமிழ்மக்கள் கூட்டணியின் 06 உறுப்பினர்கள்,  ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் 03 உறுப்பினர்கள் ஆகியோர் பாதீட்டுக்கு ஆதரவாகவும், தேசிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் 01 உறுப்பினர் ஆகியோர் பாதீட்டுக்கு எதிராகவும் வாக்களித்தனர்.