3ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையைக் குறைப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 300 குறைக்கப்படவுள்ளது, அதன் புதிய விலை ரூ. 4,465 ஆகும்
5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 118 குறைக்கப்படவுள்ளது, அதன் புதிய விலை ரூ. 1,792 ஆகும்.
இதேபோல், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 55 அதிகரிக்கப்படவுள்ளது, அதன் புதிய விலை ரூ. 835 ஆகும்.





