நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம் இரண்டாம் வாசிப்பில் நிறைவேற்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று செவ்வாய்க்கிழமை (17) 152 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.