நாடாளுமன்ற சேவையாளர்கள் ஐஸ், போதைப்பொருள் பாவனை.கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு’ என்று செய்தி வெளியான செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது சபைக்கு அறிவிப்பு விடுக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் அறிவித்ததாவது,
2026.01. 11 ஆம் திகதியன்று சிங்கள பத்திரிகை ஒன்று ‘பாராளுமன்ற சேவையாளர்கள் ஐஸ், போதைப்பொருள் பாவனை. கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியானது 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பாராளுமன்ற தத்துவங்கள் மற்றும் சிறப்புரிமைக்கு முற்றிலும் விரோதமானது.
நாடாளுமன்ற சேவையாளர்கள் குறித்து போலியான செய்திகளை வெளியிடும் போது நாடாளுமன்ற கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இந்த செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அறிவுறுத்துகிறேன் என்றார்.





