நானுஓயா – பதுளை வரையான தொடருந்து சேவை இம்மாதம் 20 ஆரம்பம்!

நானுஓயா – பதுளை வரையிலான ரயில் சேவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த நானுஓயா – அம்பேவல வரையிலான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே அப்பாதை வழியாக மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.