நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையானது இன்று திங்கட்கிழமை (08) மாலை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு ;

கண்டி மாவட்டம் – ஹத்தரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பாஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரளை, தெல்தொட்ட, பூஜாபிட்டிய, கங்க மேல் கோரளை, பன்வில, கங்கவட கோரளை, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிபே, தொலுவ, தும்பனை, அக்குறணை, உடுநுவர, பாததும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள்

கேகாலை மாவட்டம் – கலிகமுவ, மாவனெல்லை, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, யட்டியந்தோட்டை, ரம்புக்கனை, வரக்காப்பொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள்

குருணாகல் மாவட்டம் – மாவத்தகம, வல்லவபிட்டிய , ரிதிகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள்

மாத்தளை மாவட்டம் – நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்க கோரளை, லக்கலை பல்லேகம, இரத்தோட்டை, யட்டவத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள்