தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாகப் புதிய காற்றுச் சுழற்சியொன்று உருவாகியுள்ளது. இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்குத் தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனா
குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது. எனவே, அந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை கிடைத்தால் அப் பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் தாழ் நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாகவிருப்பது அவசியம்.அத்துடன் மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாமென எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





