திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற 49 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (26) கிடைத்த தகவலின் அடிப்படையில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த நபர் நிலாவெளி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



