நீண்ட காலமாக முட்டைகளை கொள்ளையடித்துவந்த ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 3,120 கொள்ளையடிக்கப்பட்ட முட்டைகளும், 2,110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிவேரிய நகரில் உள்ள முட்டை வியாபார நிலையமொன்றில்; இருந்து முட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, காவல் துறைக்கு கிடைத்த புகாரினை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அதற்கமைய, சிசிடிவி காணொளி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் இரவில் முச்சக்கரவண்டியில் வந்து கொள்ளையடிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் யக்கல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 05 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படவுள்ளார். வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



