நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு விளக்கம்

நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை மறுசீலமைப்புகள் குறித்து அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி ஆகியோர் அடங்கிய அரசாங்க பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை (9) கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை உறுப்பினர்களை சந்தித்து, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய துறைகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புகள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளனர்.

ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, அதன் பொதுச் செயலாளர் அஷ்- ஷைக் அர்கம் நூராமித் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நீதித்துறை அமைப்பு தொடர்பாக தற்போது சமூகத்தில் பரவி வரும் தவறான தகவல்களை தெளிவுபடுத்தி, அரசாங்கத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.