நுவரெலியாவிற்கு உள் நுழைவதற்கான நான்கு வீதிகள் இப்போது திறக்கப்பட்டுள்ளது

நாட்டில் நிலவிய  அதிதீவிர வானிலை காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் , மண்சரிவு உட்பட ஏனைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு  நுவரெலியாவிற்கு உள் நுளையும் நான்கு பிரதான வீதிகள் தடைபட்டிருந்தன.

புதன்கிழமை (10) நிலவரப்படி, நுவரெலியா-கண்டி வீதி உட்பட நுவரெலியாவுக்குச் உள் நுளையும் நான்கு வீதிகளில் தடைகள் நீக்கப்பட்டு  மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை (10) பிற்பகல்  நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்டச் செயலாளர் மேலும் கூறுகையில் பிரதான வீதிகளை சீர்திருத்தம் செய்த போதிலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அந்த வீதிகளை வழக்கம் போல் போக்குவரத்துக்கு  பரிந்துரை அறிக்கையை வழங்க வில்லை .

வீதியின் தன்மையினை ஆராய்ந்து போக்குவரத்தில் ஈடுபட முடியும் என பரிந்துரை வழங்கிய பிறகு கனரக வாகனங்கள் தாராளமாக சென்று வருவதற்கு வீதி திறக்கப்படும்.எனினும் இலகுகரக வாகனங்கள் தாராளமாக சென்று வருவதற்கு வீதி திறக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் 19,832 குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 63,000 உறுப்பினர்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் 6,700 குடும்பங்கள் 212 பேர் தற்காலிக தங்குமிட முகாம்களில் உள்ளனர், எனவே அவர்களுக்கு சமைத்த உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது .

மேலும் தற்போதைய வானிலை நிலை சீரான பின்னர் இடம்பெயர்ந்தவர்களில் சிலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 67 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் வீடுகளை சுத்தம் செய்வதற்காக 25,000 ரூபாய் பணம் அடுத்த சில நாட்களில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.