யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றுப் புதன்கிழமை (25.03.2026) இரவு கைதான ஏழு இந்தியாவின் தமிழக மீனவர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு வடக்குக் கடற்பரப்பில் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஏழு இந்தியாவின் தமிழகம் இராமேஸ்வரம் மீனவர்களைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். இரு விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன. கைதான மீனவர்கள் இன்று (26.03.2026) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 09 ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



