நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகலை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவோம் எனக்கூறியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் நாட்டின் எந்த ஒரு நிலப் பகுதியையும் ரஷ்யாவிற்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுனார்.




