பாதிக்கப்பட்ட மதஸ்தானங்கள் புனரமைப்பு நடவடிக்கைக்கு ஹஜ் குழு நிதி அன்பளிப்பு

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மதஸ்தானங்கள் புனரமைப்பு நடவடிக்கைக்காக   ஹஜ் குழுவினால் 5 மில்லியன் ரூபா திங்கட்கிழமை (08) புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அமைச்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதுதொடர்பான காசாேலை ஹஜ் குழுவின் தலைவர் பட்டய கணக்காளர் ரியாஸ் மிஹ்லாரினால் புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹனிதும சுனில் செனவியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் கலந்துகாெண்டிருந்தனர்.