மாரவில – புலுகஹவெவ பகுதியில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (02) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மாரவில பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, 236 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 9315 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஜெயபீம பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கம்பஹா – மாஹேவிட்ட பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (02) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1080 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




