களனி – பியகம வீதியில் பண்டாரவத்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவத்த பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை கடுவலை நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த குறித்த நபர் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குறித்த பகுதியில் நடமாடும் யாசகர் ஒருவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளில் பியகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.



