சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வருடாந்த வைகாசிப் பெருவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) காலை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் முதன்மை நிகழ்வாக 2025 ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருது பெற்றவரும், அமெரிக்காவில் விருது பெற்றவருமான பிரபல நாதஸ்வர வித்துவான் ஈழநல்லூர் பி. எஸ்.பாலமுருகன் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டைத் தொடர்ந்து காலை-09 மணியளவில் பாலமுருகனின் கைகளில் வேல் வழங்கப்பட்டுக் கெளரவித்து தவில், நாதஸ்வர முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சந்நிதியான் ஆச்சிரமம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்துச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளால் ‘ ஞானபண்டித இசைஞானகேசரி ‘ எனும் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.







