கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (07) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 992 கிலோ கிராம் 750 கிராம் பீடி இலைகள், இரண்டு படகுகள் மற்றும் லொறி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் 32 முதல் 38 வயதுக்குட்பட்ட ஆடியம்பலம், லுணுவில மற்றும் வாய்க்கால் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





