புதன்கிழமை தோறும் மேலதிக வகுப்புகளுக்கு தடை

நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்களைக் கருத்திற்கொண்டு, வாரந்தோறும் புதன்கிழமை மேலதிக வகுப்புகளை நடாத்த வேண்டாம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் பாவனையைக் குறைப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, எரிபொருள் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் அனைத்துப் புதன்கிழமைகளும் பின்வரும் நிறுவனங்களுக்கு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:

அனைத்துப் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களின் செயற்பாடுகளும் புதன்கிழமைகளில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், சுகாதாரம், துறைமுகங்கள், நீர் விநியோகம், எரிசக்தி மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்பதால், அவற்றுக்கு இந்த விசேட விடுமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.