புத்த மதத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் சிலர் தெரிவிக்க முயற்சிக்கின்றனர்

திருகோணமலை சம்புத்தி ஜயந்த விகாரை சம்வத்துடன் பெளத்த மதத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். அவர்களின் கூற்றுக்களில் எந்த அடிப்படையும் இல்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது என பிரதி அமைச்ர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்ற  2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு , பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சம்புத்தி ஜயந்தி விகாரை தொடர்பில் நான் அறிந்தமட்டில் சுஜீவ எம்.பி தெரிவிப்பதுபோல் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்று இல்லை. பொலிஸ் பீ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் உத்தரவொன்று பிரப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரமே தற்போது திருகோணமலை குறித்த விகாரை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

அதனால் இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, புத்த மதத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் சிலர் தெரிவிக்க முயற்சிக்கின்றனர். இவர்களின் இந்த குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படையும் இல்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இ்தனை தற்போது நீதிமன்றத்துக்கு ஒப்படைத்திருக்கிறோம்.

மேலும் பொலிஸ் இடமாற்ற நடவடிக்கை, பொலிஸ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமையவே இடம்பெறுகிறது. மாறாக இந்த விடயங்களில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. திருகோணமலை விகாரை சம்பவத்திலும் நாங்கள் அரசியல் செய்யவி்ல்லை.

மாறாக கடந்த காலங்களில் பொலிஸ்மா அதிபரை அரசியல் மயமாக்கியதால், அவரை பதவியில் இருந்து நீக்கி, தற்போதுள்ள பொலிஸ்மா அதிபராக நியமிக்க பல மாதகாலம் சென்றது.அந்தளவுக்கு கடந்த காலங்களில் இந்த அமைச்சு அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் நாங்கள் அவ்வாறு எதனையும் செய்யவில்லை. மாறாக பொலிஸ் தொடர்பில் பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் திணைக்களத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.

அதேபோன்று நாடு போதைப்பொருள் பாவனையால் சீரழிந்திருந்தது. இதனை கட்டுப்படுத்தும் பாரிய பாெறுப்பு ஜனாதிபதிக்கு இருந்தது. பொலிஸ்மா அதிபருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் இந்த போதைப்பொருள் வியாபாரத்தின் வலையப்மைபை அறிந்துகொள்ள முடிந்தது.

போதைப்பொருள் வியாபாரத்தின்  அரசியல் என்ற தலை பாராளுமன்றத்திலே இருந்தது. அந்த அரசியல் தலையை நீக்குவதற்கு எமக்கு முடியுமாகி இருந்தது.

போதைப்பொருள் என்ற முடிச்சின் மேல் இடம் வெளிநாட்டிலே இருந்து. கடந்த அரசாங்கம், இவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை நிறுத்தியிருந்தார்கள்.

இதற்கு பின்னால் கடந்த அரசாங்கத்தில் இருந்த பலரும்  இதில் அங்கம் வகித்திருந்தனர். அதனாலே அவர்களால் இதனை தடுக்க முடியாமல் போயிருந்தது.

ஆனால் போதைப்பொருள் வியாபார  வலையமைப்பின் மேல் இடத்தில் இருந்த வெளிநாட்டில் இருந்தவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தாேம். அதனால் பொலிஸ்மா அதிபருக்கு நாட்டில் இருக்கும் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மீது கைவைக்க முடியுமாகி இருந்தது.

போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எமது கட்சியைச்சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருக்காக எங்களில் யாரும் பொலிஸுடன் கதைக்கவில்லை. அவ்வாறான பொலிஸொன்று ஏற்படுத்துவதற்கே மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கினார். அந்த பொறுப்பை நாங்கள் சரியாக செய்துவருகிறோம் என்றார்.

சமீபத்திய செய்திகள்