போலி சாரதி அனுமதி பத்திரத்தை தயாரித்த இருவர் கைது

பொரலஸ்கமுவ – வெரஹெர பகுதியில், போலி சாரதி அனுமதி பத்திரங்களை தயாரித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று புதன்கிழமை (10) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களைக் கைது செய்து, பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்தவர்கள், 43 மற்றும் 61 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து,  05 போலி சாரதி அனுமதி பத்திரங்கள், காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களுக்காக வழங்கப்பட்ட 65 போலி தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள், 01 மடிக்கணினி, 05 காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்கள், 02 போலி சாரதி அனுமதி பத்திரங்கள், 10 ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள், 02 தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று, (11) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.