மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் மூன்றாம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்தப் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் மூன்றாம் திங்கள் உற்சவம் திங்கட்கிழமை (30.03.2026) அதிகாலை-05 மணியளவில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி ஆலயப் பொங்கல் உற்சவத்தில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு பொங்கல் மற்றும் நேர்த்தி வழிபாடுகளை ஆற்றினர்.