மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா இடையேயான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரவு நேர தபால் ரயில் தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதோடு, பதுளை – கொழும்பு ரயில் சேவைகளும் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், ரயில் மார்க்கத்தில் உள்ள மண்மேடுகளை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.