வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட மல்லாகம் கோணற்புலம் வீதி, சோடாக் கொம்பனி வீதி மற்றும் மில் லேன் ஆகிய மூன்று வீதிகளுக்கான பெயர்ப் பலகைகள் தன்னார்வ அமைப்புக்களின் நிதி அனுசரணையுடன் புதிதாக அமைக்கப்பட்டு புதன்கிழமை (18.03.2026) திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்மக்கள் கூட்டணியின் வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பெ.தனராஜ், தமிழ்மக்கள் கூட்டணியின் உறுப்பினர் சசிதரன் ஆகியோரின் முயற்சியில் அனுசரணையாளர்களூடாகக் குறித்த பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.






