மல்லாகம் கள்ளுத் தவறணைக்குள் போதைப் பொருள் விற்பனை: 4 பேர் கைது!

யாழ் மல்லாகம் குளமங்கால் வீதியில் இயங்கி வரும் கள்ளுத் தவறணைக்குள் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் நால்வர் சனிக்கிழமை (21.03.2026) பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மல்லாகம் நீதிமன்றத்துக்கு அண்மையில் இயங்கி வரும் மேற்படி கள்ளுத் தவறணைக்கு வருவோர் தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதுடன் போதை வியாபாரங்களிலும் ஈடுபடுவதாகவும், கள்ளுத் தவறணையை உடனடியாக அங்கிருந்து அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.