முல்லேரியாவில் போதைப்பொருளுடன் பெண் கைது!

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடெல்லவத்தை பகுதியில் முல்லேரியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றவளைப்பில் 116 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இச்சுற்றவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.