முல்லைத்தீவு மாவட்ட வீரர்களுக்கான தேசிய கராத்தே பயிற்றுனர்களின் இரண்டு நாள் கராத்தே பயிற்சி முகாம்

முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன்  முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு வீரர்களுக்காக தேசிய கராத்தே பயிற்றுனர்களினால் வழங்கபட்ட இரண்டு நாள் கராத்தே பயிற்சி கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்றது.

இந்த பயிற்சி நெறிக்காக நிதியானது மாகாண விளையாட்டு திணைக்களத்தால் (PSGD)  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வீரர்களை பயிற்றுவிக்கும் பயிற்றுனர்களினால் பயிற்சிகளை வழங்கியதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் 108 கராத்தே வீரர்கள் மேற்படி 2 நாள்  பயிற்சியில் கலந்து கொண்டனர்.