முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி வவுனியாவை சென்றடைந்தது..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி நேற்று (14.05) வவுனியாவை  சென்றடைந்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக வவுனியா நகரை வந்தடைந்தது.

இதன்போது, வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது அஞ்சலியை செலுத்தியதுடன் அதனைத்தொடர்ந்து மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

 

அத்துடன், நகரவீதியூடாக சென்ற ஊர்தி பவனியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.