மொரட்டுவை – ஏகடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் நீராட சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை பதிவாகியுள்ளது.
காணாமல் போனவர் மொரட்டுவை – கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நண்பர்களுடன் கடலுக்கு நீராட சென்றிருந்தபோது, மூவரும் கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
காணாமல் போன நபரைத் தேடும் பணியில் ஏகடஉயன பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.




