யாழ்ப்பாணம் – வலிகாமம் பிரதேசத்தை சேர்ந்த மூத்த விவசாயி ஒருவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஆண்கள் தினத்தினை முன்னிட்டு சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் தொடர்ச்சியாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் சுன்னாகம் பிரதேசத்தினை சேர்ந்த நாகநாதர் தர்மராசா என்கிற மூத்த விவசாயி ‘ஏராள் வேந்தன்’ எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவரோடு விவசாயத்தில் பக்க பலமாக இருந்த அவரின் மனைவிக்கும் சேர்த்து சிறப்புக் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விருதினை கழகச் சிறுவன் ரவிசங்கர் யக்சன் மற்றும் சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தினர் இணைந்து வழங்கி வைத்தனர்.
சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்ட குறித்த நிகழ்வு சனிக்கிழமை (13) மாலை சுன்னாகம் ரயில் நிலையம் அருகே உள்ள சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
குறித்த விருதுக்கான அனுசரணையினை ந.மனோகரன் குடும்பத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வருடாந்தம் சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு சிறந்த விவசாயிக்கான விருது சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தால் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






