யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியை சேர்ந்த  இளைஞனே 2 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.