யாழில் பேரிடரால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் கையளிப்பு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் செயற்திட்டத்தின் கீழ் டித்வா புயலின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதுடன் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த  110 குடும்பங்களுக்கு முதல்கட்டமாகச் செவ்வாய்க்கிழமை (09.12.2025) அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களான நாவாந்துறை, கல்லுண்டாய் ஆகிய பகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கே இவ்வாறு அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வில் 110 குடும்பங்களுக்குமான அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. உலருணவுப் பொதிகளுக்கான நிதியை அமரர் பொ.பரமேஸ்வரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகள் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.