யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் பலி!

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் திங்கட்கிழமை (15) தாவடி பகுதியில் 2வது மாடியில் வேலை செய்தபோது தவறி 1வது மாடியில் விழுந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (16)  மதியம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.