யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையப் பயணிகள் முனையக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (15.12.2025) நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய இணை முகாமைத்துவத் தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சர்வமதக் குருமார்களின் வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டி வைத்தனர்.