ஞாயிற்றுக்கிழமை (16.11.2025) காலை-08.30 மணி முதல் திங்கட்கிழமை (17.11.2025) காலை-08.30 மணி வரையான 24 மணி நேரத்தில் இலங்கை முழுவதும் அதிகூடிய மழைவீழ்ச்சி யாழ்.நகரிலேயே பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தினர் தெரிவித்துள்ளனர். இக் காலப் பகுதியில் யாழ்.நகரில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தினர் தெரிவித்தனர்.
குறித்த காலப் பகுதியில் நெடுந்தீவில் 94.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 91.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அச்சுவேலியில் 88.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன எனவும் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தினர் கூறியுள்ளனர்.





