யாழ். நகரில் கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலையின் 43 ஆவது வருட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24.07.2026) மாலை-04 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு அருகில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கடந்த-1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள-பௌத்தப் பேரினவாத ஆட்சியாளர்களால் திட்டமிட்டு இனப் படுகொலை அரங்கேற்றப்பட்ட 43 ஆவது ஆண்டில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் உறவுகளை நினைவு கூர்ந்தும், இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்