யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத்துறையைச் சேர்ந்த மாணவனான வோல்டர் இருதயராஜன் டிலக்ஸன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்துள்ளார்.
பொதுப் பட்டமளிப்பு விழாவின் ஆறாவது அமர்வு வெள்ளிக்கிழமை (20.02.2026) மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற போதே அவருக்கான கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பட்டப்படிப்புத் தேர்வில் ஊடகப் படிப்பில் முதல்நிலை மாணவராகத் தேர்வானமைக்காக ஊடகப் படிப்பிற்கான ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் நினைவுத் தங்கப் பதக்கம், 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பட்டப்படிப்புத் தேர்வில் ஊடகப் படிப்பில் அச்சு ஊடகத்தில் சிறந்த செயல்திறனுக்கான ‘ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை’ நினைவுத் தங்கப் பதக்கம், ஒழுக்கநெறி சார்ந்த ஊடகவியலில் திறமைச் சித்திக்காக ஆனந்தி சூரியப்பிரகாசம் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் ஆகிய பதக்கங்களே டிலக்ஸனுக்கு வழங்கப்பட்டுள்ளன.





