யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையில் பேராசிரியராக கடமையாற்றி வந்த தயாலினி திலீபன் என்பவரை மூன்று நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதி அரியாலையில் வசித்து வந்த தயாலினி திலீபன் எனும் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பேராசிரியரை மூன்று நாட்களாக காணவில்லை என தினகரனுக்கு செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருகையில்,
குறித்த பேராசிரியரின் வீடு உடைக்கப்பட்டு கார் என்பன காணாமல் போயுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரான பேராசிரியர் தயாலினி திலீபன் மற்றும் அவருடைய மகளையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மகள் ஒருவரை காதலித்து வந்ததாகவும் காணாமல் போன காரில் இவர்கள் இருவரும் சென்று வங்கிக்கணக்கில் உள்ள பணத்தினை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், திருகோணமலையில் QR ஐ பயன்படுத்தி காருக்கான பெற்றோலை பெற்றுக்கொண்டு மகளும், மகளின் காதலனும் தலைமறைவாகி உள்ளனர் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த பெண்ணின் தயாரான தயாலினி திலீபன் என்பவரை குறித்த சம்பவத்திற்கு பிறகு மூன்று நாட்களாக காணவில்லை.
இது தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





