யாழ்.மாவட்டச் செயலகக் கட்டடத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு!

யாழ்.மாவட்டச் செயலக கட்டடத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையானது திங்கட்கிழமை (01.09.2025) யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

பிரதித் தபால்மா அதிபரால் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரால் ஞாபகார்த்த முத்திரையானது மத குருமார்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்