யாழ்.மாவட்டச் செயலகத்தில் புனரமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் ஆரோக்கிய உணவகம் இன்று வியாழக்கிழமை (09.04.2026) யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) பா.சிவகரன், இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், ஆரோக்கிய உணவக ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






