யாழ்.ராணி புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ். ராணி புகையிரத சேவை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும். திங்கட்கிழமை (22.12.2025) காங்கேசன்துறையிலிருந்து அநுராதபுரம் வரையும்  யாழ். ராணி  புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமாகுமெனப் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.