வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (09) மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு , எதிர்வரும் 09ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
புகையிரத சேவைக்கான முற்பதிவுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால் , புகையிரத கடவைகளை கடப்பவர்கள் பாதுகாப்பாக கடக்குமாறும் , புகையிரத பாதைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





